20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் 'போலாமா ஊர்கோலம்'

20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் 'போலாமா ஊர்கோலம்'
போலாமா ஊர்கோலம், சக்தி மகேந்திரா, பிரபுஜித்

கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் 'போலாமா ஊர்கோலம்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ள படம், 'போலாமா ஊர்கோலம்'. கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கும் பிரபுஜித், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர், ஏற்கெனவே, சுட்டுப் பிடிக்க உத்தரவு, ஜகமே தந்திரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன், பெரிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இதில் நாயகியாக சக்தி மகேந்திரா நடித்துள்ளார். ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் 1980களில் மாநில, தேசிய அளவில் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்திருக்கிறார்கள்.

போலாமா ஊர்கோலம், மதுசூதன், சக்தி மகேந்திரா, பிரபுஜித்
போலாமா ஊர்கோலம், மதுசூதன், சக்தி மகேந்திரா, பிரபுஜித்

இந்தப் படம் வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ``ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்தச் சம்பவங்களின் தொகுப்புதான் படம்'' என்றார் இயக்குநர்.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி ஆந்திராவிலும், 20 சதவீதம் தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது. வைஷாலி சுப்பிரமணியம், டேவிட் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமந்த் நாக் இசை அமைத்துள்ளார். கே.எம்.ரயான் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

Related Stories

No stories found.