பிறந்த நாளில் இறந்த பழம்பெரும் நடிகர்!

பிறந்த நாளில் இறந்த பழம்பெரும் நடிகர்!
மன்னவ பாலையா

பழம்பெரும் தெலுங்கு நடிகர் மன்னவ பாலையா, தனது பிறந்த நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் மன்னவ பாலையா. சென்னை கிண்டியில், மெக்கானிக்கல் என்ஜினீயர் படித்த இவர், அப்போதே நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் 1958-ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய இவர், சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 10 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ள பாலையா, ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பாதிப்புகளால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94. தனது பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.