'கேஜிஎஃப்’ பட நடிகருக்கு கேன்சர்: சிகிச்சைக்குப் பணமின்றி தவிப்பு

'கேஜிஎஃப்’ பட நடிகருக்கு கேன்சர்: சிகிச்சைக்குப் பணமின்றி தவிப்பு

’கேஜிஎஃப்’ பட நடிகருக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய். இவர் ’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ படங்களில் காசிம் சாச்சா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாரிடமும் தெரிவிக்காமல் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சிகிச்சைக்குப் பண உதவி கேட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த 3 வருடமாகத் தொண்டைப் புற்றுநோயால் அவதிப்படுகிறேன். ’கேஜிஎஃப்’ படத்தில் நீண்ட தாடியுடன் நடித்திருப்பேன். இந்த நோயால், என் கழுத்தில் இருந்த வீக்கத்தை மறைக்கவே அப்படி வைத்திருந்தேன். என்னிடம் பணம் இல்லாததால் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைத்தேன். இப்போது நோய் தீவிரமடைந்து விட்டது. என் சேமிப்பு இதுவரையான சிகிச்சைக்குச் செலவழிந்துவிட்டது. மீதமுள்ள சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாதம் ரூ.3 லட்சம் செலவாகிறது. மக்களிடம் உதவி கேட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக வீடியோ ஒன்றை எடுத்தேன். என்னால் அதை வெளியிட இயலவில்லை. முன்னணி நடிகர் ஒருவர் எனக்கு உதவி இருக்கிறார். நன்கொடையாளர்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை அறிந்த கன்னட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in