நாகசைதன்யா தமிழில் அறிமுகமாகும் 'கஸ்டடி’: இளையராஜா, யுவன் இணைந்து இசை மீட்டுகின்றனர்

நாகசைதன்யா தமிழில் அறிமுகமாகும் 'கஸ்டடி’: இளையராஜா, யுவன் இணைந்து இசை மீட்டுகின்றனர்

இயக்குநர் வெங்கட்பிரபு, நாகசைதன்யா இணையும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநாடு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு நடிகர் நாகசைதன்யாவுடன் இணைந்திருக்கிறார். தமிழ்- தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் தலைப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு ‘கஸ்டடி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக சைதன்யாவுடன் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.

பொதுவாக வெங்கட்பிரபு படங்களில் எப்போதும் டேக் என்பதை கவனத்தைப் பெறும். அந்த வரிசையில், இந்த ‘கஸ்டடி’ திரைப்படம் ‘வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக்குடன் முதல் பார்வை வெளியாகியுள்ளது. தீவிரமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாக சைதன்யா தமிழில் இந்தப் படம் மூலம் நேரடியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க இந்தப் படத்தை பவன் குமார் வழங்குகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in