’கரகாட்டக்காரன் 2’ படத்தை இயக்கும் வெங்கட்பிரபு?

இயக்குநர் வெங்கட்பிரபு
இயக்குநர் வெங்கட்பிரபு’கரகாட்டக்காரன்2’ படத்தை இயக்கும் வெங்கட்பிரபு?

’கரகாட்டக்காரன்2’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு ராமராஜன், கனகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. படம் மாபெரும் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தினை இயக்குநரும், கங்கை அமரனின் மகனுமான வெங்கட்பிரபு இயக்குவார் என சொல்லப்படுகிறது.

’கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகனாக ராமராஜன் நடித்திருப்பார். அவருடைய கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருக்கிறார் எனவும், முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோரே இந்தப் பாகத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்டத் தகவல் வெங்கட்பிரபு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in