நடிகர் விஜய் தளபதியா, சூப்பர் ஸ்டாரா?... வெங்கட்பிரபு ஓபன் டாக்!

வெங்கட்பிரபுவுடன் விஜய்
வெங்கட்பிரபுவுடன் விஜய்

'தளபதி 68' பட டைட்டிலில் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று போடுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அட்லி, தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டது. இந்த நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'தளபதி 68' படம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறுகையில், " 'தளபதி 68' பட அப்டேட் குறித்து இப்போது சொல்ல முடியாது.' லியோ' ரிலீஸுக்குப் பிறகு அப்டேட் வரும். தற்போது ஃப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் கமிட் ஆனவுடன் முதலில் அஜித் குமார் தான் எனக்கு வாழ்த்து கூறினார்" என்று கூறினார்.

அப்போது, உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா என்று செய்தியாளர் வினா எழுப்பினார். அதற்கு " நான் தளபதி என்று தான் போடுவேன்" என்று இயக்குநர் வெங்கட்பிரபு பதிலளித்தார்.a

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in