ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’

ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. சிம்புவும், கௌதம் வாசுதேவ் மேனன் இருவருமே அவர்களது வழக்கமான பாணியிலிருந்து விலகி வித்தியாசமான திரைக்கதையுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை இத்திரைப்படம் ஏற்படுத்தியிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் வரிகளுடன் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது மும்பையில் நடந்துவருகிறது.

Related Stories

No stories found.