படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: பிரபல நடிகை படுகாயம்

படப்பிடிப்பு தளத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: பிரபல நடிகை படுகாயம்

இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பு தளத்தில் வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.

பிரபல இந்தி நடிகையான பல்லவி ஜோஷி தனது சிறந்த நடிப்பிற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரியின் மனைவியான பல்லவி ஜோஷி தற்போது 'தி வாக்சின் வார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கில மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல்லவி ஜோஷி மீது பயங்கரமாக மோதியது. இதில் பல்லவி ஜோஷி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in