சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கவே விஜய் அரசியலில் குதித்துள்ளார்... விளாசிய வீரலட்சுமி!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் தான் கோடிகளில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கவே அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி விளாசியுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். இதையடுத்து ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என் அறிவித்திருக்கும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இரண்டு ஆண்டு அவகாசத்தில் கட்சியைப் பலப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது வெங்கட்பிரபுவின் 'GOAT' மற்றும் ’தளபதி 69’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ள விஜய், முழு நேர அரசியலுக்கு வருவதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே அவர் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கத்தான் என தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரலட்சுமி
வீரலட்சுமி

இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, “திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி நடிகர் விஜயின் தீவிர ரசிகை. ஒரு வருடத்திற்கு முன்பு இவரை 5 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தையும் தனது ஏழ்மை நிலையையும் வீடியோ வாயிலாக சொன்ன அந்தச் சிறுமி விஜயிடம் உதவி கேட்டாள். விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு அந்தச் சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தார்கள். அது சில காலம் மட்டுமே மருத்துவ உதவிக்கு பயன்பட்ட நிலையில் அந்த சிறுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாள்.

விஜய்க்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், உங்கள் பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் எங்கெங்கு கூரை வீடு இருக்கிறதோ அதையெல்லாம் மாற்றி கல்வீடு கட்டித் தாருங்கள். அதற்கு மனம் இருக்கிறதா? தீக்காயம் அடைந்த சிறுமிக்கு உதவ முடியவில்லை. சினிமாவில் தன்னுடைய 47 வருட இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து விட்டு அவர் சேர்த்து வைத்த பணத்தை பாதுகாக்க மட்டுமே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்” என்று விளாசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in