பிரபல சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த `ஏஜென்ட் டினா’

பிரபல சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த `ஏஜென்ட் டினா’

’விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டினாவாக நடித்த வசந்தி, இப்போது பிரபல ஹீரோ படத்தில் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’விக்ரம்’. இதில், விஜய்சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்தனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அனிருத் இசையில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில், ஏஜென்ட் டினாவாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றவர் வசந்தி. சண்டைக் காட்சிகளிலும் அவர் மிரட்டியிருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, தினேஷ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

மம்மூட்டியுடன் ’ஏஜென்ட் டினா’ வசந்தி
மம்மூட்டியுடன் ’ஏஜென்ட் டினா’ வசந்தி

’விக்ரம்’ படம் அவருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்துள்ளதை அடுத்து, இப்போது வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்நிலையில், அவர் மம்மூட்டி நடிக்கும் த்ரில்லர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பி.உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படம் மூலம் வசந்தி மலையாளத்தில் அறிமுகமாகிறார். மம்மூட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

இதில், மம்மூட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சினேகா, அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். வினய் வில்லனாக நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in