காஷ்மீரா பர்தேசி
காஷ்மீரா பர்தேசி’வசந்தமுல்லை’

நடிப்பைக் கற்றுக்கொள்ளவும் இந்தப் படம் உதவியது!

‘வசந்தமுல்லை’ காஷ்மீரா பர்தேசி பேட்டி

’சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா பர்தேசி. ’அன்பறிவு’, ‘வரலாறு முக்கியம்’ படத்தை அடுத்து சமீபத்தில் வெளியான ‘வசந்தமுல்லை’ படத்தில் கதையின் நாயகியாக படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் காஷ்மீராவுக்கு. ‘வசந்தமுல்லை’ பட வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அவரிடம் படம் குறித்தும் அவரது சினிமா பயணம் பற்றியும் ‘காமதேனு’வுக்காக பேசியதிலிருந்து...

வசந்தமுல்லை’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?

வசந்தமுல்லை படத்தில்...
வசந்தமுல்லை படத்தில்...

சினிமாவில் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகியாக இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும்படியாக எனக்கு இந்த நிலா கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. மேலும், ஒருவன் தூங்காமல் இருப்பதால் என்னவெல்லாம் நேரிடும், அதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் வலியுறுத்தக்கூடிய கதை என்பதாலும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

முதல்பாதி கதை கேட்டதுமே நான் இதில் உடனே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். நடிப்பில் சில விஷயங்கள் கற்றுக் கொள்ளவும் இந்தப் படம் உதவியது. அதனால், இனிவரும் காலங்களில் வெறும் கமர்ஷியல் படங்களின் கதாநாயகி மட்டுமே என்றில்லாமல், என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்.

இந்தப் படத்தில் வருவது போன்று தூக்கம் தொலைத்து, மன அழுத்தத்திற்கு ஆளான அனுபவம் ஏதும் இருக்கிறதா?

காஷ்மீரா பர்தேசி
காஷ்மீரா பர்தேசி

மீடியா, சினிமாத்துறையே பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நானும் அதுபோன்ற நாட்களை கடந்துதான் வந்திருக்கிறேன். இன்னும் எதிர்கொண்டும் இருக்கிறேன். சினிமாத்துறை என்றில்லாமல் எந்தத் துறையை எடுத்தாலும் அங்கு ஏதேனும் ஒருவகையில் அழுத்தம் தரக்கூடிய விஷயங்கள் வேலையிலும் பொதுவிலும் நடந்து கொண்டுதான் இருக்கும் என்பது கசப்பான உண்மை.

ஆனாலும், சினிமாத்துறையில் வேலை தொடர்பாக இருக்கும் அழுத்தம், எதிர்பார்ப்பு குறித்து எனக்குள் எந்தவிதமான புகாரும் இல்லை. இது எல்லாம் தெரிந்துதான் இங்கு வந்தது. அதை எதிர்கொண்டு, அதில் இருந்து எப்படி நம்மை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என சூழலை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

சமீபகாலமாக, கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகள் அதிகம் வருவதை எப்படிப் பார்க்கறீர்கள்?

காஷ்மீரா பர்தேசி
காஷ்மீரா பர்தேசி

உண்மையில் இது வரவேற்கத்தக்கது. சமீபத்தில் அப்படி வெளியான ‘யசோதா’ படம் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரை ‘96’ படம் கூட வுமன் சென்ட்ரிக் என்றுதான் சொல்வேன். ஒரு கதாநாயகியாக, பெண்ணாக இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கூட பெண்களை அதிகார மையத்திற்கு உட்படுத்தியே காண்பித்து இருப்பார்கள். கமர்ஷியல் படம் என்றாலும், பெண்களை மையப்படுத்திய கதை என்றாலும் சரி அதில் அவர்களது கதாபாத்திரம் எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

’பர்ஃபி’ படத்தில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரம், ‘பொன்னியின் செல்வன்’ ஐஷ்வர்யா ராய் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதேபோல, சின்ன வயதில் இருந்து என் பாட்டி நிறைய புராணக்கதைகள் எல்லாம் சொல்வார். அதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உண்டு.

உங்களுடைய அடுத்தப் படங்கள் என்னென்ன?

காஷ்மீரா பர்தேசி
காஷ்மீரா பர்தேசி

’அன்பறிவு’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் ‘பிடி சார்’ படத்தில் நடிக்கிறேன். ஃபேமிலி டிராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் டீச்சராக கதாபாத்திரம் எனக்கு. ‘அன்பறிவு’ படத்தில் இருந்தே ஹிப்ஹாப் ஆதியுடன் நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. ‘பரம்பொருள்’ படம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இது இல்லாமல், ஒரு தெலுங்கு படம், பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in