
வசந்தபாலன் இயக்கும் ’அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன், தனது நண்பர்கள் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அநீதி என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார்.
’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், இதில் கதையின் நாயகனாகவும் துஷாரா விஜயன் நாயகியாகவும் நடித்துள்ளனர். வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், அர்ஜூன் சிதம்பரம் உட்பட பலர் நடித்துள்ளார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, ஏகாதசி பாடல்களை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகப் படக்குழுத் தெரிவித்துள்ளது.