பிரபல நடிகரை காதலிக்கிறேனா?- நடிகை திடீர் மறுப்பு

பிரபல நடிகரை காதலிக்கிறேனா?- நடிகை திடீர் மறுப்பு

நடிகரை காதலிப்பதாக வந்த தகவலை பிரபல நடிகை திடீரென மறுத்துள்ளார்.

தமிழில், சசிகுமார் நடித்த ’பிரம்மன்’, சந்தீப் கிஷன் நடித்த ’மாயவன்’ படங்களில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வரும் அவர், வருண் தேஜுடன் மிஸ்டர், அந்தரிக்‌ஷம் படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.

வருண் தேஜ், தெலுங்கு சினிமாவின் மெகா ஹீரோவான சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன்.

வருண் தேஜ், லாவண்யா
வருண் தேஜ், லாவண்யா

இந்நிலையில், வருணும் நடிகை லாவண்யாவும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக, செய்திகள் பரவி வருகின்றன. இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்த லாவண்யா, இப்போது அதை மறுத்திருக்கிறார்.

‘’நானும் வருண் தேஜும் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுவது வித்தியாசமான வதந்தி. அவருடன் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்ததால் இப்படி பரப்பி இருக்கிறார்கள். நான் யாரையும் காதலிக்கவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார் லாவண்யா திரிபாதி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in