போலி நம்பர் பிளேட்; ஹெல்மெட் அணியவில்லை- பிரபல ஹீரோவுக்கு அபராதம்

போலி நம்பர் பிளேட்; ஹெல்மெட் அணியவில்லை- பிரபல ஹீரோவுக்கு அபராதம்

படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோ, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் வருண் தாவன், இப்போது பவால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. இங்குள்ள ஆனந்த் பாக் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது செல்போனில் சிலர் வீடியோக்கள் எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பைக்கில் வரும் வருண் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் செல்கிறார். இதைக் கண்ட போலீஸார், அவருக்கு அபராத சலான் அனுப்பியுள்ளனர்.

வேறொருவரின் நம்பர் பிளேட்டை அந்த பைக்கில் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்னும் ஒரு அபராத சலான் வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி போக்குவரத்து இணை கமிஷனர் சங்கல்ப் கூறும்போது, ``வீட்டியோ, புகைப்படங்களின் அடிப்படையில் அவர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால், அபராத சலான்கள் அனுப்பப்பட்டுள்ளன. தனது வாகன எண்ணை, வருண் தன் பைக்கில் பயன்படுத்தியதாக ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் அந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.