ஒரே நாளில் வெளியாகும் 'வாரிசு' vs 'துணிவு': என்ன காரணம்?

ஒரே நாளில் வெளியாகும் 'வாரிசு' vs 'துணிவு': என்ன காரணம்?

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களின் சென்சார் மற்றும் டிரெய்லர் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.

ஜனவரி 11 மற்றும் 12 என முன்பின்னாக வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் நேற்றும் இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் ஜனவரி 11 என அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ல் ‘ஜில்லா’ மற்றும் 'வீரம்’ படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதன் பிறகு, கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11 என வெளியீட்டுத் தேதியை அறிவித்தனர். இதன் பிறகே ‘வாரிசு’ படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. ஒருநாள் முன் பின்னாக படம் வெளியானால் நிச்சயம் படத்தின் ரிசல்ட் விமர்சனங்களுக்குள்ளாகும் என்பதால் ஜனவரி 11-ம் தேதியே வெளியாக ‘வாரிசு’ படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in