இன்று வெளியாகும் ‘வாரிசு’ டிரெய்லர்- ஹைலைட்ஸ் என்னென்ன?

இன்று வெளியாகும் ‘வாரிசு’ டிரெய்லர்- ஹைலைட்ஸ் என்னென்ன?

இன்று வெளியாகும் விஜய்யின் ‘வாரிசு’ பட டிரெய்லரின் ஹைலைட்ஸ் குறித்து பெருத்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் இன்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டிரெய்லர் கால நேரம் தோராயமாக 2 நிமிடங்கள் 3 செகண்ட் இருக்கும் எனவும், டிரெய்லர் முடியும்போது நடிகர் விஜய்யின் பன்ச் வசனத்தோடு முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யின் கதாபாத்திர பெயர் விஜய் என்றே இருக்கும் என்ற தகவலும் முன்பு வெளியாகி இருந்தது. இதுவும் டிரெய்லரில் இடம்பெறும்.

2000-ல் வெளியான ‘ப்ரியமானவளே’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் தன்னுடைய பெயரிலேயே ஒரு படத்தில் நடிக்கிறார். 2 மணி நேரம் ஓடக்கூடிய ‘வாரிசு’ படத்தின் தணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில் படம் வெளியாகும் தேதி எப்போது என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் இல்லாமல் முன் பின்னாக வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in