வெளியானது ‘வாரிசு’ டிரெய்லர்; 25 நிமிடத்தில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்தது!

வெளியானது ‘வாரிசு’ டிரெய்லர்; 25 நிமிடத்தில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்தது!

‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானதை அடுத்து ‘துணிவு’ படத்தின் பார்வைகளை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சொன்னது போல, குடும்பம் அதன் பாசத்தை அடிப்படையாக கொண்டு சென்டிமெண்ட்- ஆக்‌ஷன் ட்ராமாவாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட் வசனங்களை விஜய் டிரெய்லரில் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே, விஜய்- அஜித் படங்கள் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் வெளியாவதை அடுத்து துணிவு vs வாரிசு என்ற போக்கு சமூகவலைதள ட்ரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. புத்தாண்டுக்கு ‘துணிவு’ பட டிரெய்லர் வெளியானதை அடுத்து தற்போது ‘வாரிசு’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது. ‘துணிவு’ பட டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாரிசு டிரெய்லர் வெளியாகி 25 நிமிடத்தில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. இதனை அடுத்து, ‘துணிவு’ பட டிரெய்லர் பார்வைகளை ‘வாரிசு’ டிரெய்லர் 24 மணி நேரத்தில் கடக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ’வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் சென்சார் ஆனதை அடுத்து அதன் வெளியீட்டுத் தேதி எப்போது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in