பெண்களுக்காகவே `வாரிசு' சிறப்புக்காட்சி: ஆட்டம், பாட்டம் போட்டு தியேட்டர் முன் அமர்க்களம்

பெண்களுக்காகவே `வாரிசு' சிறப்புக்காட்சி: ஆட்டம், பாட்டம் போட்டு தியேட்டர் முன் அமர்க்களம்

கோவையில் பெண்களுக்கென்று `வாரிசு' திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படம் பார்க்க வந்த பெண்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் படத்தை கண்டு களித்தனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள `வாரிசு' திரைப்படம் கடந்த 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் `வாரிசு' படத்தை பார்க்க பெண்களுக்கு சிறப்புக் காட்சியை கோவை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர், அதன்படி நேற்று ஒரு திரையரங்கில் பெண்களுக்கென்று `வாரிசு' திரைப்படம் திரையிடப்பட்டது. திரையரங்குக்கு வந்த நூற்றுக்கணக்கான பெண்கள், பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த `வாரிசு' படத்தை பார்க்க ஏற்பாடு செய்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in