‘வாரிசு’ படத்தின் இரண்டாம் சிங்கிள் இன்று வெளியாகிறது: தீப்பிடிக்கும் அப்டேட்!

‘வாரிசு’ படத்தின் இரண்டாம் சிங்கிள் இன்று வெளியாகிறது: தீப்பிடிக்கும் அப்டேட்!

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகிறது.

விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே...ரஞ்சிதமே’ பாடல் ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ‘தீ தளபதி’ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என இயக்குநர் வம்சி அறிவித்துள்ளதுடன், அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

பொங்கல் வெளியீடாக அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ படமும் ரிலீஸாகவுள்ளதால் இப்போதே இரு படத்திற்குமான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in