'வாரிசு' பட ரிலீஸ் தேதி இது தான்: ராஷ்மிகா கொடுத்த நியூ அப்டேட்

'வாரிசு'  பட ரிலீஸ் தேதி இது தான்:  ராஷ்மிகா கொடுத்த நியூ அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தில் வெளியீட்டு தேதியை அப்படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா அப்டேட் செய்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்கள் ரிலீஸாக உள்ளது. வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் சென்சார் பணிகள் இன்னும் நிறைவடையாததால் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில், 'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் இன்று உரையாடினார். " 'வாரிசு' படம் ஜனவரி. 11-ம் தேதி ரிலீஸாகிறது, அது உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" எனவும் கூறி இருக்கிறார். எனவே, ஜன.12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'வாரிசு' திரைப்படம் ஜன.11-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in