‘வாரிசு’ படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

‘வாரிசு’ படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றியது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்.

நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ள அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ‘வாரிசு’ பட உரிமையை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில் , செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in