‘வாரிசு’ பட இசைவெளியீட்டு விழா: தொகுத்து வழங்குவது யார்?

‘வாரிசு’ பட இசைவெளியீட்டு விழா: தொகுத்து வழங்குவது யார்?

’வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இதற்காக இப்படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ ஆகிய இரண்டு பாடல்கள் தமன் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் 24 அன்று இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. விழா நிகழ்விடமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் தேர்வாகி இருக்கிறது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகரான ராஜூ ஜெயமோகன் தொகுத்து வழங்குகிறார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ராஜூ, ‘நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவினை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி. இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து படத்தின் பாடல்கள் அனைத்தையும் கேட்க இருக்கிறீர்கள். நன்றி!’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இந்த ட்வீட் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஏனோ, ராஜூ இதனை நீக்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழாவில், தெலுங்கு ‘வாரிசு’ பட வெளியீட்டில் பிரச்சனை, தமிழகத்தில் ‘வாரிசு’ பட திரையரங்குகளின் எண்ணிக்கையில் போதாமைஆகியவை குறித்து விஜய் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in