‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவால் விஜய்க்கு வந்த சிக்கல்!

‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவால் விஜய்க்கு வந்த சிக்கல்!

நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. நேரு வி்ளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்தால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் நூற்றுக்கணக்கான இருக்கைகளை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஒட்டு மொத்தமாக எத்தனை இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாளை கணக்கெடுத்து, ஒரு இருக்கைக்கு ரூ.2000 வீதம் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என நேரு உள் விளையாட்டு அரங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் விஜய்யின் தரப்பு சிக்கல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in