துபாயில் நடக்கிறதா 'வாரிசு' இசை வெளியீட்டு விழா?

துபாயில் நடக்கிறதா 'வாரிசு' இசை வெளியீட்டு விழா?

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வம்சி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளன்ர. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிச.24-ம் தேதி துபாயில் இசை வெளியீட்டு விழாவை நடத்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in