மீண்டும் கசிந்த ‘வாரிசு’ புகைப்படம்: இந்த முறை பாடல் காட்சி!

மீண்டும் கசிந்த ‘வாரிசு’ புகைப்படம்: இந்த முறை பாடல் காட்சி!

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கிவரும் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்துவருகிறது.

ஏற்கெனவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. தற்போது மீண்டும் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தின் சில புகைப்படங்கள் கடந்த ஜூலை மாதம் இணையத்தில் கசிந்தன. அடுத்த சில வாரங்களில், நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சியின் புகைப்படம் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதில் நடிகர் விஜய் கோட், ஷூட் அணிந்து தொழிலாளர்களிடம் பேசுவது போல காட்சி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்நிலையில், மீண்டும் இப்படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in