
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் நகரங்களில் நடந்துவந்தனர். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் சென்னைக்குத் திரும்பினார்.
ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றின் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, "வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம்" என விஜய்யின் மகன் சஞ்சய் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், காட்சிகள் கசிவது தொடர்கிறது. இதுவரை படங்கள்தான் கசிந்துவந்தன.
ஆனால் தற்போது விஜய் - ராஷ்மிகா நடனமாடும் பாடலின் 30 நொடி காணொலியே கசிந்திருப்பது படக்குழுவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.