வருகைக்கு முன்பே வசூலில் கலக்கும் ‘வாரிசு’!

வருகைக்கு முன்பே வசூலில் கலக்கும் ‘வாரிசு’!

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில், இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளியாவதற்கு முன்பே இப்படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமை 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமை 60 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கும், இந்தி டப்பிங் உரிமை 32 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது.

இதன் மூலம் வெளியிடப்படுவதற்கு முன்பே இப்படம் 184 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் திரையரங்க வெளியீட்டு உரிமை இன்னும் விற்கப்படவில்லை. அது விற்கப்பட்டால் அதன்மூலம் 100 கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் இப்போதே 80 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் பார்த்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் படு உற்சாகத்தில் இருக்கிறாராம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in