அடுத்தடுத்து லீக் ஆகும் `வாரிசு' புகைப்படங்கள்: தந்தைக்காக வேண்டிக்கொள்ளும் நடிகர் விஜய்யின் மகன்

அடுத்தடுத்து லீக் ஆகும் `வாரிசு' புகைப்படங்கள்: தந்தைக்காக வேண்டிக்கொள்ளும் நடிகர் விஜய்யின் மகன்

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் அவரது மகன் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கிவரும் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இதனிடையே, வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. தற்போது மீண்டும் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றின் புகைப்படம் வெளியானது. அடுத்தடுத்து, நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சியின் புகைப்படம் வெளியாகி வருவது படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், "வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in