‘வாரிசு’ ஓடிடி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வாரிசு - விஜய்
வாரிசு - விஜய்

விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒருசேர வெளியாயின. திரையரங்க வெளியீட்டில் வசூலிலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பிலும் பல்வாறாக இந்த திரைப்படங்கள் பூர்த்தி செய்தன. அடுத்த அப்டேட்டாக, ஓடிடி ரிலீஸ் குறித்தான தகவல்கள் எதிர்பார்ப்புக்கு ஆளாயின.

முந்திக்கொண்ட துணிவு திரைப்படம், பிப்.8 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் டாப்டென் வரிசையில் ’துணிவு தமிழ்’ மற்றும் இதர மொழிப் பதிப்புகள் முன்னிலை வகித்து வருகின்றன. தியேட்டரை தொடர்ந்து துணிவு உடன் ஓடிடியிலும் மோதவேண்டும் என்ற விஜய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை நிவர்த்தி செய்யும் விதமாக, தற்போது அதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் பிப்.20 அன்று வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் பதிப்புகளில் வாரிசு திரைப்படத்தினை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in