‘இன்றுதான் எனக்கு தீபாவளி’ - தமன் வெளியிட்ட ‘வாரிசு’ பாடல் அப்டேட்!

‘இன்றுதான் எனக்கு தீபாவளி’ -  தமன் வெளியிட்ட  ‘வாரிசு’  பாடல் அப்டேட்!

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ இன்று வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ எனும் பர்ஸ்ட் சிங்கிள் முழுமயான பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. இது தொடர்பாக படத்தின் இசையமைப்பாளர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமன் இசையில் விவேக் எழுதிய இந்த பாடலை விஜய் மற்றும் மானசி பாடியுள்ளனர். `ரஞ்சிதமே ரஞ்சிதமே' என தொடங்கும் இந்த பாடலின் புரோமோ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதனிடையே 'வாரிசு' படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in