முதல் நாள் வசூலில் முந்தியது துணிவா? வாரிசா?

வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக துவங்கிவிட்டது, காரணம் இரண்டு பெரிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு படு குஷியை தந்துள்ளது.

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் நல்ல தரமான கதைக்களத்தை கொண்டதால் விமர்சனமும் அமோகமாக வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு படங்களும் முதல் நாள் வசூலிலும் ரூ. 20 கோடியை தாண்டியுள்ளது.

தற்போது அஜித்தின் 'துணிவு' திரைப்படம் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல், கேரளாவில் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பெரிய வசூல் செய்து அங்கு முதல் நாள் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in