‘வாரிசு’ எனக்கு ஸ்பெஷலான படம்’- மனம் திறந்த விஜய்!

’வாரிசு’
’வாரிசு’ விஜய்...

’வாரிசு’ தனக்கு எப்போதுமே ஸ்பெஷலான படம்' என்று நடிகர் விஜய் தெரிவித்திருக்கிறார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகும் நிலையில், இந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து படம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது.

இதற்காக இந்தப் படம் குறித்து ஓடிடி தளத்திற்கு நடிகர் விஜய் பகிர்ந்திருப்பதாவது, ‘’வாரிசு’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். கமர்ஷியல் படமாக இருந்தாலும், இந்தக் கதையில் இருக்கக்கூடிய உணர்ச்சிப்பூர்வமான விஷயம் மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டது போன்றவை பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்திருக்கிறது. படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாவது உலகம் முழுதும் இருக்கக்கூடிய நாடுகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது’ எனப் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in