‘வாரிசு’ படத்தின் கலை இயக்குநர் மரணம்- இயக்குநர் உருக்கமான பதிவு!

‘வாரிசு’ படத்தின் கலை இயக்குநர் மரணம்- இயக்குநர் உருக்கமான பதிவு!

‘வாரிசு’ படத்தின் கலை இயக்குநர் சுனில் பாபு திடீர் மரணம் அடைந்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர்கள் விஜய், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘வாரிசு’ திரைப்படம் இந்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. படத்திற்கான கொண்டாட்டங்களில் ரசிகர்கள் இருக்கும்போது அந்தப் படத்தில் வேலை பார்த்த கலை இயக்குநர் சுனில் பாபு தீடீர் மரணம் எய்தியுள்ளது ரசிகர்களையும் படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு தீடீர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 50 படங்களில் பணியாற்றியுள்ளார். ’பெங்களூர் டேய்ஸ்’, ‘கஜினி’, ’வில்லு’ ஆகியவை குறிப்பிட்டு சொல்லும்படியான அவரது திரைப்படங்கள் ஆகும். இவருக்கு பிரேமா என்ற மனைவியும் ஆர்ய சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

இவரது மரணம் பற்றி இயக்குநர் வம்சி பகிர்ந்துள்ள ட்வீட்டில், ‘நீங்கள் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி சென்றுள்ளீர்கள் சுனில் சார். நீங்கள் எனக்கு நல்ல சகோதரனாகவும் நண்பனாகவும் இருந்துள்ளீர்கள். இப்போது அமைதியாக எங்களை விட்டு சென்றுள்ளீர்கள். நீங்கள் வேலை பார்த்த ஒவ்வொரு படத்திலும் உயிர் வாழ்ந்தீர்கள். இனி வரும் நாட்களில் நிச்சயம் உங்களை மிஸ் செய்வோம். ஓம் சாந்தி!’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in