ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்த `வாரிசு' டிக்கெட்: விஜய் ரசிகர்மன்றத் தலைவர் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்த `வாரிசு' டிக்கெட்: விஜய் ரசிகர்மன்றத் தலைவர் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் குடும்பத்தாருக்கு முகமூடி கும்பல் இரவில் மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள `துணிவு' ஆகிய 2 படங்கள் ஜன.11ல் திரைக்கு வருகின்றன. ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இவ்விரு படங்களின் முதல் காட்சியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள 2 தியேட்டர்களில் இரண்டு படங்களும் தலா மூன்று சிறப்பு காட்சி ரசிகர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 'வாரிசு' படத்திற்கான முதல் மூன்று காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்களை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க தலைவர் பாலமுருகன் முன்பதிவு செய்துள்ளார். இக்காட்சிகளை முன்பதிவு எடுக்க விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் பகீரத முயற்சி செய்தும் கிடைக்காமல் போனது. இதனால், ஆத்திரமடைந்த 15 பேர் கொண்ட கும்பல், ராமநாதபுரம் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் பகுதியில் உள்ள பாலமுருகன் வீட்டிற்கு இன்றிரவு சென்றது.

அதில் முகமூடி அணிந்த 7 பேர் அவரது வீட்டு கதவை தட்டியுள்ளது. கதவை திறந்து வெளியே வந்த பாலமுருகன் மனைவி, அவரது மகள் ஆகியோரிடம் பாலமுருகனை கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டல் விடுத்து கீழே இறங்கியது. அங்கு வீட்டு வாசல் முன் நின்ற பாலமுருகனுக்கு சொந்தமான காரை கீழே சாய்த்து விட்டு தப்பிச்சென்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கேணிக்கரை போலீஸில் பாலமுருகன் புகாரளித்தார். இதனடிப்படையில் கேணிக்கரை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு முகமூடி அணிந்து மிரட்டல் விடுத்த கும்பலை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in