உளவியல் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி

உளவியல் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமார், ’சபரி’என்ற உளவியல் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.

மஹா மூவிஸ் நிறுவனம் சார்பில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிக்கும் படம், சபரி. அனில்காட்ஸ் இயக்கி வரும் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார்.

படக்குழுவுடன் வரலட்சுமி சரத்குமார்
படக்குழுவுடன் வரலட்சுமி சரத்குமார்

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தில் தொடங்கியது. தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது, காதல் மற்றும் க்ரைம் கலந்த புதிர் கதை. தீவிரமான உளவியல் த்ரில்லர் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசை அமைக்கிறார். நானி சமிடிசெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.