‘மைக்கேல்’படத்தில் இணைந்த வரலட்சுமி

வரலட்சுமி
வரலட்சுமி

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பிந்துமாதவி நடித்த யாருக்கும் அஞ்சேல் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து இயக்கும் படம் ’மைக்கேல்’. இதில், சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக் ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இப்போது முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது கேரக்டர் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in