ஹனுமான் பர்ஸ்ட் லுக்: மிரட்டும் வரலட்சுமி

ஹனுமான் பர்ஸ்ட் லுக்:  மிரட்டும் வரலட்சுமி

ஹனுமான் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா. இவர், கல்கி, சோம்பி ரெட்டி உட்பட சில தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து இயக்கும் படம், ஹனுமான். இதில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்கிறார். அமிர்தா ஐயர், சதீஷ்குமார், ராஜ் தீபக் உட்பட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஹீரோ படமான இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அஞ்சனம்மா என்ற கேரக்டரில் நடிக்கும் அவருடைய தோற்றத்தைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கையில் தேங்காய் குலையுடன் இருக்கும் அவருக்கு ’மக்கள் செல்வி’ என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர். அவருடைய முதல் தோற்றத்தை நடிகர் சுதீப் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது, பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in