'நான் ஆகாஷின் மகன்' என சொன்ன மகனுக்கு வனிதாவின் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து

'நான் ஆகாஷின் மகன்' என சொன்ன மகனுக்கு வனிதாவின் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து

தன்னுடைய மகன் ஸ்ரீஹரி பிறந்தநாளையொட்டி நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில், மகன் ஸ்ரீஹரி தந்தையுடன் இருந்து வருகிறார்.

மகன் ஸ்ரீஹரி தன்னுடன் தான் இருக்க வேண்டும் என வனிதா அப்பொழுது பெற்றோருடனும் கணவருடனும் சண்டையிட்டார். ஆனால், ஸ்ரீஹரி தனக்கு தந்தை ஆகாஷுடன் இருக்கவே விருப்பம் என தெரிவித்து அவருடன் இருந்து வருகிறார். மகள் மட்டும் வனிதாவுடன் வசித்து வருகிறார். நேற்று ஸ்ரீஹரிக்கு 21-வது பிறந்தநாள்.

ஸ்ரீஹரி
ஸ்ரீஹரி

இதனையொட்டி, மகன் ஸ்ரீஹரியின் பிறந்தநாளுக்காக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீஹரியின் புகைப்படங்களை பகிர்ந்து வனிதா கூறியிருப்பதாவது; ‘என்னுடைய முதல் காதலே! காதல் எப்போதும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு என்பது மற்ற எந்த அன்பையும் விட பரிசுத்தமானது. நான் தாயாகி இன்று 21-வது வருடம். அதாவது என் முதல் குழந்தை ஸ்ரீஹரிக்கு இன்று 21-வது பிறந்தநாள். உறுதியான திறமையான அழகான எனது மகன் ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எப்போதுமே என்னுடைய லட்டு. உன்னுடைய அனைத்து கனவுகளும் நிறைவேற கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்’ இவ்வாறு தனது பதிவில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் வனிதா.

ஸ்ரீஹரி தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டே நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். நண்பர்களுடன் இணைந்து அவர் குறும்படங்களில் நடித்து வருகிறார். அதற்கான பதிவுகளை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய குறும்படங்களில் ஒன்றான 'சேட்டா ஒரு டீ' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் கமென்டில் ஒருவர், ‘ இது நடிகை வனிதாவின் மகனா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஸ்ரீ ஹரி, 'நான் ஆகாஷின் மகன்' என பதிலளித்துள்ளார். இதிலிருந்து அம்மா வனிதா மீது ஸ்ரீஹரிக்கு இன்னும் கோபம் போகவில்லை என்பது தெளிவாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in