விக்னேஷ் சிவன் வெளியிட்ட `கேசினோ’ பர்ஸ்ட் லுக்

வாணி போஜன்
வாணி போஜன்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் ’கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

மாதம்பட்டி சினிமாஸ் மற்றும் எம்.ஜே.மீடியா பேக்டரி தயாரிக்கும் படம், கேசினோ. மார்க் ஜோயல் இயக்கும் இந்தப் படத்தில் ’மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மற்றும் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாணி போஜன், மாதம்பட்டி ரங்கராஜ்
வாணி போஜன், மாதம்பட்டி ரங்கராஜ்

விக்னேஷ் ஜே.கே. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தினேஷ் நாகராஜன், ஸ்டான்லி சேவியர் இசை அமைக்கின்றனர். ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் 70 சதவீதக் காட்சிகள் கட்டிடத்திற்குள் நடக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் கோயமுத்தூரில் படமாக்கப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று வெளியிட்டார். ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தைத் தேடி ஓடும் ஒரு கேரக்டர் என இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in