பரத்தின் 50-வது படத்தில் இணைந்தார் வாணி போஜன்

பரத்தின் 50-வது படத்தில் இணைந்தார் வாணி போஜன்
பரத், வாணி போஜன்

பரத் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவர் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமான பரத், 50-வது படத்தை எட்டியிருக்கிறார். அவருடைய 50-வது படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

படத்தொடக்க விழாவில், பரத், வாணி போஜன், ஆர்.பி.பாலா, பி.ஜி.முத்தையா
படத்தொடக்க விழாவில், பரத், வாணி போஜன், ஆர்.பி.பாலா, பி.ஜி.முத்தையா

த்ரில்லர் கலந்த ஃபேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இதில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்தப் படத்தில், விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லூசிஃபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பி.ஜி.முத்தையா இதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, கவுசல்யா பாலா தயாரிக்கின்றனர். ரான்னி ரபேல் இசை அமைக்கிறார்.

Related Stories

No stories found.