‘வலிமை’ திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

‘வலிமை’ திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வலிமை’. வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் அப்டேட் கேட்டு இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

வினோத் இதற்கு முன்னதாக இயக்கிய ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைப் போன்று ‘வலிமை’ திரைப்படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘வலிமை’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் தமிழில் மட்டுமே இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழியிலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குப் பதிப்புக்கு ‘பலம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஜனவரியில் ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீம்லா நாயக்’, ‘ராதே ஷ்யாம்’ போன்ற பெரிய பட்ஜெட் தெலுங்குப் படங்கள் வெளியாகவுள்ளதால் ஆந்திரா, தெலுங்கானா பகுதியில் ‘பலம்’ திரைப்படம் சாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in