‘வலிமை’ புதிய ப்ரொமோ: போனிகபூர் வெளியீடு

‘வலிமை’ புதிய ப்ரொமோ: போனிகபூர் வெளியீடு

அடுத்த வாரம் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள சூழலில் அதன் புதிய ப்ரொமோ வீடியோவை, தயாரிப்பாளர் போனிகபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பிப்.24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது வலிமை திரைப்படம். முன்னதாக ஜன.13 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த வலிமை திரைப்படம், ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளிப்போனது. தொற்றின் பரவல் குறைந்த நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் பலவும் படிப்படியாக ரத்தாகின. அந்த வரிசையில் திரையரங்குகளின் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

இதையடுத்து, பிப்.24 அன்று வலிமை திரைப்படம் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். படத்தின் ப்ரொமோசன் நடவடிக்கைகளில் ஒன்றாக, புதிய ப்ரொமோ வீடியோ ஒன்றை, போனிகபூர் இன்று(பிப்.16) வெளியிட்டார். அரை நிமிடம் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், வலிமை திரைப்படத்தின் அதகளமான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. அஜித் குமார் தோன்றும் பைக் சாகசக் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக அஜித்குமார் - போனிகபூர் - ஹெச்.வினோத் மீண்டும் இணையும் ஏகே.61 திரைப்படத்துக்கான ப்ரொமோ புகைப்படத்தை, தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து வலிமை ப்ரொமோ வீடியோவையும் இன்று போனிகபூர் வெளியிட்டதில், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.