’வலிமை’ நடிகர் திடீர் திருமணம்

’வலிமை’ நடிகர் திடீர் திருமணம்
நடிகர் துருவன் - அஞ்சலி திருமணம்

அஜித்தின் ’வலிமை’ படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் திடீர் திருமணம் செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் துருவன். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த துருவன், `குயின்' என்ற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, சில்ரன்ஸ் பார்க், ஃபைனல்ஸ், ஆராட்டு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் ’வலிமை’ படத்தில் அமித் என்ற கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள, நான்சி ராணி, ஜனகனமண படங்கள் வெளிவர இருக்கின்றன. பாலக்காடு ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த இவருக்கும், அஞ்சலி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இவர்கள் திருமணம் இன்று காலை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.