கார் ரேஸ் விவகாரம்: தனுஷ் பட நடிகருக்கு அபராதம்

கார் ரேஸ் விவகாரம்: தனுஷ் பட நடிகருக்கு அபராதம்

விவசாய நிலத்தில் கார் ரேஸில் பங்கேற்ற, தனுஷ் பட நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்தவர், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ள ’விசித்திரன்’ படத்தின் ஒரிஜினலான ’ஜோசப்’ படத்தில் நடித்தவர் இவர்தான். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

இவர் கேரள மாநிலம் வாகமணில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தனது விலையுயர்ந்த ஜீப்பில், கடந்த சில நாட்களுக்கு முன் கார் பந்தயத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின. விவசாய நிலத்தில், அனுமதி இன்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது கேரள மாணவர் சங்கம் போலீஸில் புகார் அளித்தது.

இதையடுத்து இடுக்கி மாவட்ட ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் அனுமதியின்று பந்தயங்களில் பங்கேற்றதற்காகவும் மோட்டார் வாகனத்துறை அவருக்கு ரூ.5000 அபராதம் விதித்தது. சில நாட்களுக்கு முன் இடுக்கி ஆர்டிஓ முன் ஆஜரான அவர், அந்த அபராதத் தொகையை செலுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in