வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு!

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சிவாங்கி, ரெடின் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வடிவேலும் பாடிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த மாதம் 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நாய் கடத்தும் கும்பலின் தலைவனாக கதைப்படி வடிவேலு வருவதாக டிரெய்லர் காட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி களத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மேலும் வடிவேலுவின் காமெடி பன்ச்களும் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.

’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் சர்ச்சைக்குப் பிறகு நடிகர் வடிவேலு கம்பேக் கொடுக்கிறார். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ தவிர ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்டப் பல முக்கியப் படங்களை நடிகர் வடிவேலு கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in