`சிங் இன் தி ரெய்ன்'- வைரலாகும் பிரபு தேவாவுடன் வடிவேலு பாடும் வீடியோ

`சிங் இன் தி ரெய்ன்'- வைரலாகும் பிரபு தேவாவுடன் வடிவேலு பாடும் வீடியோ

`சிங் இன் தி ரெய்ன்' என பிரபு தேவாவுடன் சேர்ந்து வடிவேலு பாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபுதேவா நடிப்பில் 2001‍ம் ஆண்டு வெளியான படமட் `மனதை திருடி விட்டாய்'. இந்த படத்தில் பிரபு தேவாவின் நண்பராக வடிவேலுவும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இருவரும் இடம்பெறும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. `மனதை திருடி விட்டாய்' படத்தில் 'சிங் இன் தி ரெய்ன்' என ஒரு காட்சியில் வடிவேலு பாடல் பாடுவார். இந்த பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நாய் சேகர் படப்பிடிப்பில் பிரபு தேவாவும், வடிவேலுவும் திடீரென சந்தித்துள்ளனர். அப்போது, பிரபு தேவாவுக்காக அவருடன் சேர்ந்து வடிவேலு `சிங் இன் தி ரெய்ன்' பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.