நான் டீசன்டான ஆளு: 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக வடிவேலு பாடிய கானா பாடல்

நான் டீசன்டான ஆளு: 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக வடிவேலு பாடிய  கானா பாடல்

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக வடிவேலு பாடிய மூன்றாவது பாடலான ‘நான் டீசன்டான ஆளு’ பாடல் லிரிக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்க நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பெரும் இடைவெளிக்குப் பின்னர் பிரதான வேடத்தில், தனது முத்திரை வசனங்கள் மற்றும் நடிப்பில் வடிவேலு தோன்றுகிறார். மீம்ஸ்களில் அதிகம் பகிரப்படும் வடிவேலு பாணி வசனங்களை உருவாக்கி, அவரது தனித்துவ நகைச்சுவைக்குக் களம் அமைத்துத் தந்த சுராஜ் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ விரைவில் திரையரங்குகளில் தரிசனம் தர இருப்பதை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 14-ம் தேதி வெளியானது. வடிவேலு ரசிகர்களுக்கு சர்ப்ஃரைஸ் கொடுக்கும் விதமாக, அவர் சொந்தக் குரலில் பாடி ஆடும் ‘அப்பத்தா’ பாடலை லைகா நிறுவனம் வெளியிட்டது. வடிவேலு குரலில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் வடிவேலு பாடிய மற்றொரு பாடலான ‘நான் டீசன்டான ஆளு’ லிரிக்ஸ் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கானா ஸ்டைலில் வடிவேலு பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in