வடிவேலு- பிரபு தேவா வைரல் வீடியோ: சந்திப்பு பின்னணி என்ன?

வடிவேலு- பிரபு தேவா வைரல் வீடியோ: சந்திப்பு பின்னணி என்ன?

'ஐ அம் சிங் இன் தி ரெய்ன்' என நேற்று நடிகர் வடிவேலு, பிரபுதேவாவை சந்தித்து பாடிய வீடியோ தான் இணையத்தின் வைரல் காணொலி. 21 வருடங்களுக்கு பிறகு இந்த 'பெஸ்ட் ப்ரண்ட்ஸ்' சந்தித்து கொண்டதன் பின்னணி குறித்து தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

சிறிய இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மூலமாக மீண்டும் திரைக்கு நடிக்க வருகிறார் வடிவேலு. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. சென்னை, மைசூர் என அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் வடிவேலுவுடன் சிவாங்கி, ஷிவானி என பல புது காம்போ இணைந்திருக்கிறது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், வடிவேலு பாட கூடிய வீடியோ ஆகியவை வைரலானது. இதனையடுத்து, நேற்று பிரபுதேவாவுடன் வடிவேலு சந்தித்து இருக்கிறார். பிரபுதேவா - வடிவேலு இணை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட கூடிய ஒன்று. 'காதலன்', 'மனதை திருடிவிட்டாய்' போன்ற படங்களில் இவர்களின் காமெடி காம்போ பெரிதும் ரசிக்கப்பட்டது.

இயக்குநராக 'போக்கிரி', 'வில்லு' படங்களிலும் பிரபுதேவா வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.

வடிவேலு தற்போது நடித்து வரும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருக்கிறார். அதற்கான சந்திப்பு தான் இது என படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஃப்ர்ஸ்ட் லுக், இசை வெளியீடு, டீசர் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in