
மாரி செல்வராஜ் இயக்கும் ’மாமன்னன்’ படக்குழுவுடன் நடிகர் வடிவேலு இணைந்துள்ளார்.
`கர்ணன்' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், மாரி செல்வராஜ். இதில் உதயநிதி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பஹத் பாசில், வடிவேலு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு நேற்று கலந்துகொண்டார். அவருக்கு மாலை அணிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’நாய்சேகர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங், மைசூரில் முடிவடைந்துள்ளது.