லண்டனில் இருந்து ஊர் திரும்பிய வடிவேலுவுக்கு கரோனா தொற்று

லண்டனில் இருந்து ஊர் திரும்பிய வடிவேலுவுக்கு கரோனா தொற்று

லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லைகா நிறுவனத் தயாரிப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் பாடல் கம்போசிங் பணிகளுக்காகப் படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்தார் வடிவேலு. தற்போது பாடல் கம்போசிங் பணிகள் முடிந்து, சென்னை திரும்பினார் வடிவேலு. அப்போது, அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கும்போது அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போரூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in